Idhayam Matrimony

அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு ஏன்? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      தமிழகம்
OPS 2024-11-17

Source: provided

சென்னை : சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சார்பாக சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 66 பேரில், 63 பேர் தங்கள் ஆதரவை தெரிவித்திருந்தனர். இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மற்றும் எண்ணி கணிக்கும் முறை மூலமாக, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார்.

இந்த நிலையில், சபாநாயகருக்கு எதிரான அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது ஏன்? என்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார். இதற்கு பதிலளித்த அவர், "தற்போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த அடிப்படையில் கொறடா உத்தரவை மீறக்கூடாது என்பதற்காக சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தேன்" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து