Idhayam Matrimony

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மே 31ம் தேதிக்குள் 1 லட்சம் வீடுகள் சட்டசபையில் அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      தமிழகம்
Periyasamy 2023-09-02

Source: provided

சென்னை: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மே 31ம் தேதிக்குள் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். இந்த சூழலில் தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் செல்லூர் ராஜு, "கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட குறைவான நிதிதான் செலவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, "நீங்கள் பசுமை வீடு திட்டத்தை அறிவித்தீர்கள். முழுமையாக செயல்படுத்தவில்லை. வரும் மே மாதம் 31ம் தேதிக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். கடந்த 8 ஆண்டு காலத்தில் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3 லட்சம் பசுமை வீடுகள் கட்டபட்டதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து