Idhayam Matrimony

பங்குச்சந்தை மோசடி வழக்கு: கவுதம் அதானி விடுவித்து மும்பை ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 18 மார்ச் 2025      இந்தியா
Adani 2024-01-05

Source: provided

மும்பை: பங்குச்சந்தை மோசடி வழக்கு தொழில் அதிபர் கவுதம் அதானியை விடுவித்தது மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கில், அதானி நிறுவனத்தின் அதிபர் கவுதம் அதானி, நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து மும்பை ஐகோர்ட்டு நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது. முன்னதாக அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் பங்குச்சந்தை விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன் மூலம் ரூ.388 கோடி வருவாய் ஈட்டியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தீவிர மோசடிகளை விசாரிக்கும் அமைப்பு (எஸ்.எப்.ஐ.ஒ.) 2012-ம் ஆண்டு கவுதம் அதானி மற்றும் ராஜேஷ் அதானி மீதும் வழக்குப்பதிவு செய்து இருந்தது.

குற்றசதி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. 2014-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு இந்த வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானியை விடுவித்து இருந்தது. ஆனால் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் செசன்சு கோர்ட்டு, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து தொழில் அதிபர்கள் 2 பேரும் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் செசன்சு கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்து இருந்தது. மேலும் மனு மீதான விசாரணை நடந்து வந்தது. நேற்றுமுன்தினம்ளள இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆர்.என்.லத்தா அமர்வு முன் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் இருந்து கவுதம் அதானி, ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 19 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 19 hours ago
View all comments

வாசகர் கருத்து