எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்’ என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 மாநிலங்களை...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்றக் கூட்டம் நிறைவடைந்தது.
விரிவாக விவாதிக்க...
பின்னர், திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துப் பேசினார். அதன் விவரம்: மத்திய அரசு தொகுதி மறுவரையறை மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்பினரை உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் விரிவாக விவாதிக்க வேண்டும். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்.
சட்டத்திருத்தத்தை...
மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. இதை உறுதி செய்ய தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறை தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ள, கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மையக் குழு, பாராளுமன்ற உத்திகளை ஒருங்கிணைத்து செயல்படும்.
மாநில மக்களிடம்...
நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, பாராளுமன்றக் குழு பிரதமரைச் சந்தித்து, இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்கும். கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு தெரிவிப்பர். கடந்த காலத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த தொகுதி மறுவரையறை விவரங்கள் மற்றும் மத்திய அரசு தற்போது மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களை அந்தந்த மாநில மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
பரவலாக வரவேற்பு...
மேலும் அவர், “இந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் வரமுடியாத சூழ்நிலை. அவர்கள் பங்கேற்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடந்துள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறைக்காக அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். கூட்டு நடவடிக்கைக் குழுவில் பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு...
பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டபோது, தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான், மகளிர் மசோதா நடைமுறைக்கு வரும் என தெளிவாகக் கூறினா். ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரம் பெற்றது பாராளுமன்றம். அங்கு, கட்டாயம் தொகுதி மறுவரையறை செய்யப்படும். அதன்பிறகு 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், அண்மையில் உள்துறை அமைச்சர் தமிழக வருகையின்போது, தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படாது என்று தெரிவித்திருக்கிறார்.
உரிமைகளை கேட்கிறோம்...
தொகுதி மறுவரையறை குறித்து எவ்வித தெளிவையும் ஏற்படுத்தாமல், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதால்தான், ஒரு தெளிவான பதிலை மத்திய அரசு தர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நாங்கள் எங்களுக்கான உரிமைகளை கேட்கிறோம். இது எந்த மாநிலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. நான் என்னுடைய உரிமையைக் கேட்பது என்பது, உங்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று அர்த்தமில்லை. மத்திய அரசின் இந்த அநீதியால், ஒருசில மாநிலங்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, நாங்கள் சரியான தொகுதி மறுவரையைறைக் கோருகிறோம் என்று கனிமொழி தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
1) கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்.
2) தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
3) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
4) கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.
5) பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ்.
6) பிஜூ ஜனதா தளம் - சஞ்சய் குமார் தாஸ் பர்மா.
7) பிஜூ ஜனதா தள கட்சி - அமர் பட்நாயக்.
8) பஞ்சாப் சிரோன்மணி அகாலி தளம் - பல்வீந்தர் சிங்.
9) கேரள இ.கம்யூ. மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம்.
10) கேரள இ.யூ.மு.லீக் - மாநில பொதுச்செயலாளர் சலாம்.
11) கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி - பிரேம சந்திரன்.
12) கேரள இ.தே.காங். மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன்.
13) தெலங்கானா அகில இ.மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் - இம்தியாஸ் ஜலில்.
14) கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி.
15) தெலங்கானா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட்.
160 கேரளா காங்கிரஸ் - பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ்.
நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்
1) மத்திய அரசு தொகுதி மறுவரையறை பணியையும் வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.
2) 1971 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும்.
3) மத்திய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
4) குறிப்பிட்ட மாநிலங்களின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இதுகுறித்த கருத்துகளை எடுத்துரைப்பர்.
5) மேலும் பிரதமர் மோடியிடம் இதுகுறித்து கூட்டாக எம்.பி.க்கள் வலியுறுத்துவார்கள்.
6) அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களைக் கொண்டுவந்து மத்திய அரசுக்குத் தெரிவிப்பர்.
7) தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை மக்களிடையே எடுத்துரைப்போம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய


