முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: இந்தியர்கள் 3 பேருக்கு மரண தண்டனை

ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2025      உலகம்
Cort 2023 07-15

Source: provided

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர்கள் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் என்பது அதிதீவிர குற்றம் ஆகும். இதனை மீறுபவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்கப்படுகின்றன. எனினும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. அந்தவகையில் இந்தியர்களான ராஜு முத்துக்குமரன் (வயது 38), செல்வதுரை தினகரன் (34), கோவிந்தசாமி விமல்கந்தன் (45) ஆகியோர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் கடந்த ஜூலை மாதம் சிங்கப்பூரில் இருந்து இந்தோனேசியாவுக்கு படகில் போதைப்பொருள் கடத்த முயன்றனர். கரிமுல் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 100 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அந்த 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து