Idhayam Matrimony

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும்: எக்காரணமானலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உறுதி

செவ்வாய்க்கிழமை, 25 மார்ச் 2025      தமிழகம்
CM-1 2023-11-18

Source: provided

சென்னை : எக்காரணத்தை கொண்டும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக கூறியுள்ளார். மேலும், மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என உறுதியளிக்கிறேன்.

சட்டப்பேரவையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். இது குறித்து அவர் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. டெல்லிக்குச் செல்லும் எடப்பாடி பழனிசாமி, அங்கு சந்திப்பவரிடம் இருமொழிக்கொள்கை குறித்து வலியுறுத்த வேண்டும்.

தமிழும், ஆங்கிலமும் தான் தமிழகத்தின் இருமொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. எக்காரணத்தை கொண்டும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று மத்திய அரசுக்கு விளக்கமளித்து இருக்கிறோம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 

இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும், பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என்ற உறுதியை வலியுறுத்தினேன். இரண்டாயிரம் கோடி என்ன, பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டேன் என தெரிவித்திருக்கிறேன். இது பணப் பிரச்சினை அல்ல இனப் பிரச்சினை. நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. தடைக்கற்கள் உண்டென்றால் அதை உடைத்தெறியும் தடந்தோள் உண்டென்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது.

யார் எந்த மொழியை கற்பதிலும் தடையாக இருப்பதில்லை. அதே வேளையில், தமிழை அழிக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. மூன்றாவது மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம்மை மென்று தின்றுவிடும் என்று வரலாறு உணர்த்துகிறது. இந்தி மொழி திணிப்பு என்பது, பண்பாட்டு அழிப்பாக அமையும் என்பதால் தான் இந்தியை எதிர்க்கிறோம். இந்த மொழித் திணிப்பின் மூலமாக மாநிலங்கள், மாநில மொழிகள் மூலம் ஒரு இனத்தின் மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்.

இதற்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமை தொகுதிகளாக நினைப்பதால்தான், இது போன்ற மொழி திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கிறார்கள். மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியை காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என உறுதியளிக்கிறேன்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து