எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : கட்சியினர் குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிப்பது வழக்கம். அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் இப்பொழுதே தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கட்சியினரும், தொண்டர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளில், ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, பொதுமக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும்.
பொதுமக்களின் தாகத்தை தணிப்பதற்காக ஆங்காங்கே அமைக்கப்படும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை கட்சி நிர்வாகிகள், காலையில் ஒரு முறையும், பிற்பகல் ஒரு முறையும் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் பராமரித்திட வேண்டும். கட்சி சார்பில் ஆங்காங்கே அமைக்கப்படும் குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை, சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் அவ்வப்போது மேற்பார்வையிட்டு, கோடை காலம் முடியும் வரை அவை முறையாக செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


