எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், தெலங்கானா சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
தெலுங்கானாவில் நாகர்கர்னூல் மாவட்டத்தில் தோமலபென்டா பகுதியருகே அமைந்த சுரங்கம் ஒன்றில் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, கடந்த பிப்ரவரி 22-ந்தேதி திடீரென மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிலர் தப்பியபோதும், 8 தொழிலாளர்கள் சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். 14 கி.மீ. நீள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை ரோபோடிக் தொழில் நுட்பம் உதவியுடன் மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனை இயற்கை பேரிடராக அரசு அறிவித்தது.
கேரளத்திலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மோப்ப நாய்கள் உதவியுடன் நடைபெற்ற சோதனையில் இடிபாடுகளுக்குள் இருந்து ஒரு தொழிலாளியின் உடல் கடந்த மாதம் 9 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.இந்த நிலையில், ஒரு மாதத்தைக் கடந்தும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் லோடேட்டி தலைமையில் நடைபெற்று வரும் மீட்புப் பணியில் இன்று அதிகாலை மற்றொரு உடல் காணப்பட்டுள்ளது. சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த கன்வேயர் பெல்ட்டுக்கு 50 மீட்டர் தொலைவில் ஒருவரின் உடல் காணப்பட்டிருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். உடல் மீட்கப்பட்ட பிறகு மரபணு பரிசோதனை செய்யப்படும். அதன்பிறகு இறந்தவரின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும்.மேலும், 6 தொழிலாளர்களின் உடலைத் தேடும் பணிகள் தொடர்ந்து வருகின்றது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


