எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிரான அரசின் தீர்மானம் தொடர்பாக தி.மு.க. - பா.ஜ.க. இடையே காரசார விவாதம் நடந்தது.
வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்து முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டது. மத்திய அரசின் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசினார் .
அப்போது சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது .
வானதி சீனிவாசன்: இஸ்லாமிய சமூகத்தோடு பிற்படுத்தப்பட்ட மக்களும் பெண்களும் முன்வர வேண்டும் என்பதற்காகவே வக்பு வாரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் மட்டுமல்ல நாடு முழுவதும் பயணித்து பல்வேறு சமூக மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்பு தான் அந்த பரிந்துரை வழங்கப்பட்டது.
அமைச்சர் ரகுபதி - நாடு முழுவதும் பெயரளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விட்டு ஆட்சேபனைகளை ஏற்காமல், ஆதரவாளர்கள் அளித்த பரிந்துரைகள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின்: கூட்டுக்குழு கூட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லாவுக்கு பேச அனுமதி வழங்கவில்லை. ஆனால் இங்கு வானதி சீனிவாசன் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அங்கு எங்களை அவர்கள் அனுமதிக்கவில்லை
வானதி சீனிவாசன்: மத்திய அரசின் சட்டத்திருத்தத்திற்கு எதிராக முதல்வர் மு க ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்கிறது. என தெரிவித்தார். இதையடுத்து வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


