Idhayam Matrimony

முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு: சட்டசபையில் பா.ஜ.க. வெளிநடப்பு

வியாழக்கிழமை, 27 மார்ச் 2025      தமிழகம்
CM-1-2025-03-27

சென்னை, முதல் அமைச்சரின் தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வெளிநடப்பு செய்தது.

மத்திய அரசு சமீபத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் அந்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அரசினர் தீர்மானத்தை கொண்டுவர முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில், வக்பு திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நேற்று கொண்டு வந்து முன்மொழிந்தார். தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிரான தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து பா.ஜ.க.வெளிநடப்பு செய்தது. முன்னதாக பா.ஜ.க.எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது, "வக்பு வாரிய சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. ஜனநாயக முறைப்படி சட்டத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. வக்பு சொத்துகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவே இந்த சட்டத்திருத்தம்; வக்பு சொத்துகளை நிர்வகிப்பதில் பெண்களுக்கும் இட ஒதுக்கீடு தருகிறது சட்டத்திருத்தம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து