எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு சர்வ சிக்ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையை (என்.இ.பி) செயல்படுத்த தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.2,100 கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய கல்வித் துறை அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.
இந்தச் சூழலில் என்.இ.பி. 2020 அல்லது பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதி எதுவும் நிலுவையில் இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
இது குறித்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திக்விஜய் சிங் தலைமையிலான நிலைக் குழுவின் அறிக்கையின் விவரம்: பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத சில மாநிலங்களுக்கு சர்வ சிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதியை விடுவிக்காததை குழு கவனித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் சில மாநிலங்களுக்கு பெருந்தொகை நிலுவையில் உள்ளது.
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 33 மாநிலங்கள் பி.எம்.ஸ்ரீக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தியும் வருகின்றன. தேசிய அளவில் மதிப்பீடு மற்றும் பாடத்திட்டத்தில் சமமான நிலையை உருவாக்க என்.இ.பி. 2020 ஒரு முன்மாதிரியான பள்ளிகளை உருவாக்குகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணக்கமாகப் பேசி இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்க்க வேண்டும். நிலுவையில் உள்ள நிதியை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.
மத்திய ஒதுக்கீடுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இந்த மாநிலங்கள் தங்கள் சொந்த நிதியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பி.எம்.ஸ்ரீ போன்ற தனித் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யாததற்காக சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதியை மாநிலங்களுக்கு நிறுத்தி வைப்பது நியாயமானது அல்ல. கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள சர்வ சிக்ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க குழு பரிந்துரைத்துள்ளது என்று அந்த சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


