எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை, நெல்லையில் இன்ஸ்டாகிராமில் அரிவாளுடன் புகைப்படம் வெளியிட்டதால் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம், சீதபற்பநல்லூர் அருகே, வேளான்குளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் (வயது 26), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையைத் தூண்டும் வகையில் அரிவாளுடன் இருக்கக்கூடிய புகைப்படத்தை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து எஸ்.ஐ. செய்யது நிஷார் அகமது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சமூக வலைத்தளங்களில் இரு தரப்பினரிடையே பிரச்சினையைத் தூண்டும் விதமாக புகைப்படத்தை வெளியிட்ட முருகனை நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


