எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருநள்ளாறு : சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனி பகவான் நேற்று (29.03.2025) கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார். மீன ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 03.06.2027 வரை இரண்டரை வருட காலத்துக்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மீன ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் ரிஷப ராசியையும், ஏழாம் பார்வையால் கன்னி ராசியையும், பத்தாம் பார்வையால் தனுசு ராசியையும் பார்க்கிறார்.
இந்த இடப்பெயர்ச்சியை கணித்து பலன்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அதேசமயம் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 2026-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி கணிக்கப்பட்டுள்ள சனிப்பெயர்ச்சி தொடர்பாக தகவல்கள் வெளியான நிலையில், தமிழகத்தில் சனிபகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு உள்ளிட்ட ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
சனிப்பெயர்ச்சியை ஒட்டி திருநள்ளாறு கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வெள்ளி கவச அலங்காரத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நள தீர்த்தத்தில் புனித நீராடி எள் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


