எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஐ.பி.எல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனையை ஜடேஜா படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடர்...
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மிகப்பெரிய சாதனை...
இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி தோல்வியை தழுவினாலும் ஐ.பி.எல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனை ஒன்றை சி.எஸ்.கே அணி வீரர் ஜடேஜா படைத்துள்ளார். அதாவது ஐ.பி.எல் தொடரில் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ரசல் உள்ளார்.
1000 ரன்கள் - 100 விக்கெட்டுகள்:
1) ரவீந்திர ஜடேஜா - 3,001 ரன்கள் மற்றும் 160 விக்கெட்டுகள்.
2) ஆண்ட்ரே ரசல் - 2,488 ரன்கள் மற்றும் 115 விக்கெட்டுகள்.
3) அக்சர் படேல் - 1,675 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகள்.
4) சுனில் நரைன் - 1,578 ரன்கள் மற்றும் 181 விக்கெட்டுகள்.
5) டுவைன் பிராவோ - 1560 ரன்கள் மற்றும் 183 விக்கெட்டுகள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


