Idhayam Matrimony

7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான அரசாணை வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2025      தமிழகம்
TN 2024-12-2

Source: provided

சென்னை : செங்கம், அவினாசி, பெருந்துறை உள்ளிட்ட 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முடிவடையும் போது 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சேலம் மாவட்டம் சங்ககிரி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, திருப்பூர் மாவட்டம் அவினாசி, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் ஏற்கெனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து