எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நேப்பிடா : மியான்மர் பூகம்பத்தில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த நிலநடுக்கத்தால் சுமார் 10,000 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுப்பப்பட்டுள்ளது.
மியான்மர் ராணுவ நிர்வாகத்தின் சமீபத்திய செய்திக் குறிப்பில், ‘நிலநடுக்கத்தால் இதுவரை 1,644 பேர் உயிரிழந்துள்ளனர். 3,400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 139 பேரை இதுவரை காணவில்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மியான்மர் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவல்களின்பேரில் சர்வதேச ஊடகங்கள், நிலநடுக்க பாதிப்பு குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன.
‘ராணுவ ஆட்சி நடைபெறுவதால் மியான்மர் நாட்டின் நிலநடுக்க பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. எங்களது கணிப்பின்படி, மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 10 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும். சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண உதவி தேவைப்படுகிறது.
தற்போது ராணுவ ஆட்சி நடைபெறும் பகுதிகளுக்கு மட்டுமே சர்வதேச மீட்பு படை வீரர்கள் சென்றுள்ளனர். ‘அரக்கான்’ படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு யாரும் செல்ல முடியாது. அந்த படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை’ என்று சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என மியான்மரில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள், பணியாளர்கள் கருதுகின்றனர்.
பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்ததாலும், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாமல் மியான்மர் ராணுவ நிர்வாகம் திணறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, மியான்மரில் நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான போதுமான மருந்துகள் அங்கு இல்லாததால் பாதிப்பு மிகவும் மோசமடையக் கூடும் என ஐ.நா அச்சம் தெரிவித்துள்ளது. இந்தப் பின்னணியில், மியான்மரில் பூகம்ப பலி எண்ணிக்கை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


