எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து ஈரான் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கடுமையான வரம்புகள் கொண்ட அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நிராகரித்தார். ஈரான் நாட்டின் தலைமை மதகுருவான அயதுல்லா கமேனிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இதனை அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒரு நேர்காணலில் பேசிய டிரம்ப், “இந்த ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள் மீது குண்டுவீச்சு நடத்தப்படும். இதுவரை அவர்கள் பார்த்திராத வகையில் இந்தத் தாக்குதல் இருக்கும். 4 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் மீது வரி விதித்ததைப் போல மீண்டும் இரண்டாம் தர வரிகள் விதிக்கப்படும்” என்று எச்சரித்திருந்தார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் பேசியபோது, “நாங்கள் பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை. அமெரிக்கா வாக்குறுதிகளை மீறியதே எங்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


