Idhayam Matrimony

அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 31 மார்ச் 2025      தமிழகம்
EPS-Photo-0225-03-31

 சேலம், கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் பொதுச்செயர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும் தொண்டு அமைப்பின் சார்பிலும் கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து நாள்தோறும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சூரமங்கலம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா   நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்துவைத்தார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது நீர் மோர், கம்மங்கூழ், நுங்கு, இளநீர், குளிர்பானங்கள் வெள்ளரிப்பிஞ்சு, கோசாப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக அவர் வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் நீர் மோரினை பெற்றனர்.

இந்த விழாவில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ், ஏ.கே.எஸ். எம். பாலு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து