எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடித்து தள்ளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் செயல், மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் மீண்டும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு புல்டோசர்கள் கொண்டு மக்கள் வசிக்கும் வீடுகளை இடிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் முந்தைய காலங்களிலும் கடும் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் உ.பி. அரசின் இந்த செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பிரயாக்ராஜ் நகரில் வீடுகள் மேம்பாட்டு வாரியத்தால் இடுத்துத் தள்ளப்பட்டது தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, உச்சல் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் வாரியம் வீடுகளை புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளுவது மனிதாபிமானமற்றது; சட்டவிரோதமானது. பொறுப்பே இல்லாமல் நடக்கும் ஆட்சியின் கீழ் இப்படி இடிக்கப்பட்டுள்ளன. உ.பி.யில் சட்டத்தின் ஆட்சி என்ற பெயரில் பொதுமக்களின் வீடுகளை இப்படி இடித்து தள்ளுவது ஏற்க முடியாதது. இத்தகைய செயல்பாடுகள் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளப்பட்ட வீடுகளுக்கு 6 வாரங்களுக்குள் தலா ரூ10 லட்சம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


