எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : சென்னை முன்னாள் கேப்டன் டோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
பஞ்சாப் வெற்றி...
18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 52* ரன்களும் விளாசினர். 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
புதிய சாதனை...
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் கேப்டன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த வகையில், ஐ.பி.எல். தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் டோனியைப் பின்னுக்குத் தள்ளி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் 2-வது இடம்பிடித்துள்ளார். கடந்தாண்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியுடன் சேர்த்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தொடரில் பஞ்சாப் அணிக்காக 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.
அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள்:
1. 10 -கௌதம் கம்பீர் (கொல்கத்தா. - 2014-2015.
2. 8 - ஷேன் வார்னே (ராஜஸ்தான். - 2008.
3. 8 - ஷ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா, பஞ்சாப். - 2024-25.
4. 7 - எம்.எஸ்.டோனி (சென்னை. - 2013.
5. 6 - கௌதம் கம்பீர் (கொல்கத்தா. - 2012.
6. 6 - எம்.எஸ்.டோனி (சென்னை. - 2014.
7. 6 - கேன் வில்லியம்சன் (ஹைதராபாத். - 2018.
8. 6 - எம்.எஸ்.டோனி (சென்னை. - 2019.
9. 6 - ஃபாப் டூபிளெசிஸ் (பெங்களூரு. - 2024.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


