Idhayam Matrimony

தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைவு

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      தமிழகம்
Gold 2024-12-09

Source: provided

சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் தங்கம் 66,480-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,310-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பவுன் ரூ.68,000+ கடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பவுனுக்கு ரூ.1,280 என குறைந்தது. இந்த நிலையில் நேற்று (ஏப்.5) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.720 குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் ரூ.90 என குறைந்துள்ளது. தற்போது ஒரு பவுன் தங்கம் ரூ.66,480 மற்றும் ஒரு கிராம் ரூ.8,310 என சந்தையில் விற்பனையானது.

உலக அளவில் தங்கத்துக்கு டிமாண்ட் அதிகம் உள்ளது. அதன் காரணமாக சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப அதன் விலை ஏற்ற இறக்குத்துடன் இருப்பது வழக்கம். இருப்பினும் இந்தியாவில் அண்மையில் வரலாறு காணாத வகையில் புதிய விலை உச்சத்தை எட்டியது தங்கம். இதற்கு உலக நாடுகளிடையே நிலவும் வர்த்தக ரீதியான தாக்கமும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அண்மையில் பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக நாடுகளுக்கு அறிமுகம் செய்தார். இந்த சூழலில் தான் தங்கம் விலை தற்போது குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.103-க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,03,000-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து