Idhayam Matrimony

தமிழக பா.ஜ.க. தலைவர் 12-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு; அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி?

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025      தமிழகம்
Annamalai 2024 11 20

Source: provided

சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் 12-ந்தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில் அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த மாத இறுதியில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இந்த 2 சந்திப்புகளும் அடுத்தடுத்து நிகழ்ந்ததால் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாக போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டால் தலைவர் பதவியில் இருக்க மாட்டேன் என்று ஏற்கனவே அண்ணாமலை கூறி இருந்தார். இதை அமித்ஷாவை சந்தித்த போது சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி விரைவில் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து மாற்றினால்தான் கூட்டணி பற்றி அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக செய்து விட்டு வேறு ஒருவரை நியமிப்பது தொடர்பாக டெல்லியில் அமித்ஷா தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார். இந்த நிலையில் அண்ணாமலை நேற்று முன்தினம் கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது, "தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை" என்று கூறினார்.

தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை விலக்கும் பட்சத்தில் அவருக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என்று ஒருசாரார் வலியுறுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இதனால் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் புதிய மாற்றங்களை எதிர்நோக்கி ஆவலுடன் காத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 11-ந்தேதி சென்னையில் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய மந்திரி கிஷண்ரெட்டி இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வர உள்ளார். அந்த கூட்டத்தில் புதிய மாநில, மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களிடம் புதிய மாநில தலைவராக யாரை தேர்வு செய்வது என்பது பற்றி கலந்துரையாடல் நடத்தப்படும். இதன் அடிப்படையில் 11-ந்தேதி அல்லது 12-ந் தேதி தமிழக பா.ஜ.க. தலைவர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. அண்ணாமலைக்கு பதில் வேறு ஒருவர்தான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து