எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராமேஸ்வரம் : கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய்வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1 கோடியே 11 லட்சம் குடும்பங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இதனால், நமது தாய்மார்களும் சகோதரிகளும் பெரும் ஆதாயமடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் பாலத்தை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றினார். உரையில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டிலுள்ள 77 ரயில் நிலையங்களையும் நவீனப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் ராமேசுவரம் ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது.
2014-க்கு பிறகு, மத்திய அரசின் உதவியோடு தமிழ்நாட்டில் 4,000 கி.மீ. அளவில் சாலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தை இணைக்கவல்ல உயர்த்தப்பட்ட இடைவெளி, அருமையான கட்டமைப்புக்கான மேலும் ஓர் எடுத்துக்காட்டு. இன்றும்கூட (நேற்று), சுமார் ரூ. 8,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள், தமிழக மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரத்தினுடனான இணைப்பையும் மேம்படுத்தும்.
சென்னை மெட்ரோ போன்ற நவீன பொதுமக்கள் போக்குவரத்து வசதியும்கூட, சுலபமான பயணம் மேற்கொள்ளுதலை மேம்படுத்துகிறது. இவ்வளவு பெரிய கட்டமைப்பு தொடர்பான பணிகளுக்கிடையே, இவற்றின் அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருவதை மறந்துவிடக் கூடாது.
கடந்த பத்தாண்டுகளில் சமூகக் கட்டமைப்பில்கூட இந்தியா சாதனைகாணும் அளவுக்கு முதலீடுகளைச் செய்திருக்கிறது. தமிழ்நாட்டின் கோடிக்கணக்கானோருக்கும் இதன் ஆதாயம் கிடைப்பது, எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் உள்ள ஏழை,எளிய 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கிடைத்திருக்கின்றன. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள், ஏழை, எளியோருக்கு கிடைத்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில், கிராமங்களில் 12 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக குழாய்வழி குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 1 கோடியே 11 லட்சம் குடும்பங்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. இதனால், நமது தாய்மார்களும் சகோதரிகளும் பெரும் ஆதாயமடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


