எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கொழும்பு : இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஏப். 5) வாக்குறுதி அளித்துள்ளார்.
தாய்லாந்தில் ‘பிம்ஸ்டெக்’ உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, பின்னா் அங்கிருந்து இலங்கைக்கு வெள்ளிக்கிழமை இரவு சென்றடைந்தாா். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமா் மோடி, அந்நாட்டு அதிபா் அநுர குமார திசாநாயக மற்றும் பிரதமா் ஹரிணி அமரசூரிய ஆகியோரை சனிக்கிழமை (ஏப்.5) சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டுள்ளாா்.
இந்த நிலையில், தமது இலங்கை பயணம் குறித்து பல்வேறு பதிவுகளை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வரும் பிரதமர் மோடி, அதில், இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.
மேலும், அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களைப்(ஐஓடி) பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களைச் சந்தித்திருப்பது பயனளிப்பதாக அமைந்துள்ளது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக இச்சமூகமானது இரு நாடுகளுக்குமிடையில் உயிர்ப் பாலமாக விளங்குகின்றது. இச்சமூகத்துக்கு பலனளிக்கும் விதமாக பத்தாயிரம் வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள், புனிதத் தலமான சீதா எலியா கோயில் மற்றும் பிற சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களை இலங்கை அரசுடன் இணைந்து கட்டமைக்க இந்தியா ஆதரவு நல்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


