Idhayam Matrimony

பொருளாதார சர்வாதிகாரத்தனம்: அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா எதிர்ப்பு

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      உலகம்
China 2024 07 31

Source: provided

சீனா : அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக்காவிலும் வெளிநாட்டு பொருள்கள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்கா மீது உலக நாடுகள் பதில் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதனால், கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள அமெரிக்கா தயாராகிவரும் சூழலில், அதிபா் டிரம்ப்பை கண்டித்து அந்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிற நாட்டு பொருள்களுக்கு டிரம்ப் அறிவித்துள்ள வரிகள்:-

சீனா  34 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம்  20 சதவீதம், பிரிட்டன்  10 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், தைவான் 32 சதவீதம், ஜப்பான்  24 சதவீதம், மலேசியா 24 சதவீதம், தென் கொரியா 25 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம், சுவிட்ஸர்லாந்து 31 சதவீதம், இந்தோனேசியா  32 சதவீதம், கம்போடியா  49 சதவீதம், இலங்கை  44 சதவீதம், பாகிஸ்தான்  29 சதவீதம், இந்த நிலையில், சீன அரசு அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் நேற்று (ஏப். 7) செய்தியாளர்களுடன் பேசுகையில்: “தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிற நாடுகள் மீது வரி திணிப்பு மற்றும் பொருளாதார சர்வாதிகாரத்தனமான மனப்பான்மையுடன் பிற நாடுகளை மிரட்டும் தன்னிச்சையான நடவடிக்கை இது” என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். 

சீனா தமது உரிமைகளையும் விருப்பங்களையும் உறுதித்தன்மையுடன் பாதுகாக்குமென்றும், சீனாவுடன் உறவை கடைப்பிடிக்க அழுத்தமும் மிரட்டல் விடுக்கும் பாணியையும் கையிலெடுத்தல் அது வேலைக்காகாது என்றும் குறிப்பிட்டுள்ளார். சீன பொருள்கள் மீது டிரம்ப் அறிவித்துள்ள 34 சதவீத பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்காவின் அனைத்து பொருள்கள் மீதும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை சீனா தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து