எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற கென்னடி என்பவருக்குச் விசைப் படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மார்ச் 19-ல் சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த சங்கர், அர்ஜுனன், தர்ம முனியாண்டி ஆகிய 3 மீனவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் புதன்கிமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து, 3 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நளினி சுபாஸ்கரன் 3 பேரையும் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்து உத்தரவிட்டார். பின்னர், விடுதலை செய்யப்பட்ட 3 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதராகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு கடந்த வாரம் தமிழக மீனவர்கள் 11 பேர் தண்டனை மற்றும் அபதராமின்றி விடுதலை செய்திருந்த நிலையில், மேலும் 3 மீனவர்கள் விடுதலை செய்திருப்பது குறிப்பிடதக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


