Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் ரூ.117 கோடியில் கட்டப்பட்டுள்ள 326 நூலக கட்டிடங்கள் மற்றும் 199 வகுப்பறை கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-1-11-04-2025

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் ரூ.117 கோடி மதிப்பிலான 326 நூலக கட்டிடங்கள், 199 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சிறப்புத் திட்டம்... 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பொது நூலகங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட 213 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ரூ.213 கோடி நிதி...

பொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களுக்கு 2023-2024-ம் ஆண்டில் மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டிற்கான சிறப்பு உதவித் திட்டம் பகுதி 7-ன் கீழ், 821 பொது நூலகங்களுக்கு கூடுதல் கட்டிடம் கட்டுதல் மற்றும் தேவையான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், கணினி தொடர்புடைய சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குதல் போன்றவற்றிற்கு சிறப்பு நிதியுதவியாக 213 கோடியே 46 லட்சம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது.

மாவட்டங்களில்...

இதில் ஒரு நூலகக் கட்டிடம் 500 சதுர அடி பரப்பளவில் 821 பொது நூலகங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழியாக புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்பொழுது ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 246 நூலகங்களும், பேரூராட்சிகள் இயக்ககம் மூலம் 44 நூலகங்களும், நகராட்சி நிர்வாகத் துறை (நகராட்சி) மூலம் 28 நூலகங்களும், பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 8 நூலகங்கள், என அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 71 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவிலான நூலகக் கட்டிடங்கள், 6 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பிலான நூல்கள், 4 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பிலான மேஜைகள், நாற்காலிகள் போன்ற தளவாடங்கள், 1 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி தொடர்புடைய சாதனங்கள், என மொத்தம் 84 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 326 நூலகக் கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஊரகப் பகுதிகளில்... 

கல்விக்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று தமிழ்நாடு சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டம் "குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" என்று ஊரகப் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

3,148 கட்டிடங்கள்...

இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தும் குழந்தை நேய சிறப்பு அமைப்புகளான உயர்த்தப்பட்ட மேற்கூரை, விசாலமான தாழ்வாரம், காற்றோட்டமிக்க ஜன்னல் வசதிகள், வழுக்காத தரைகள், கற்றலை ஊக்குவிக்கும் சுவர் ஓவியங்கள், வாழ்க்கைப் பாடங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை 1,014 கோடி ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 3,148 வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மதுரை-ராமநாதபுரம்...

அதன் தொடர்ச்சியாக, குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டம் - திருக்கோவிலூர், காஞ்சிபுரம் மாவட்டம் - ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர் மற்றும் தளி, மதுரை மாவட்டம் - செல்லம்பட்டி மற்றும் மதுரை கிழக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் - திருமருகல், புதுக்கோட்டை மாவட்டம் - அன்னவாசல், கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, குன்றாண்டர் கோவில், விராலிமலை மற்றும் மணமேல்குடி, ராமநாதபுரம் மாவட்டம் - கடலாடி, கமுதி, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருப்புல்லானி, ராணிப்பேட்டை மாவட்டம் - அரக்கோணம், சோளிங்கர், திமிரி மற்றும் காவேரிப்பாக்கம், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி மற்றும் வாழப்பாடியில் பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

199 கட்டிடங்கள்...

தஞ்சாவூர் மாவட்டம் - பூதலூர், மதுக்கூர், கும்பகோணம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர், தஞ்சாவூர், திருப்பனந்தாள் மற்றும் அம்மாபேட்டை, திருச்சி மாவட்டம் - மண்ணச்சநல்லூர், மணப்பாறை, புள்ளம்பாடி மற்றும் திருவெறும்பூர், திருப்பத்தூர் மாவட்டம் - மாதனூர், ஜோலார்பேட்டை, கந்திலி மற்றும் நாட்ராம்பள்ளி, தrமபுரி மாவட்டம் - நல்லம்பள்ளி மற்றும் அரூர், திருவாரூர் மாவட்டம் - முத்துபேட்டை மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ரூ. 32 கோடியே 64 லட்சம் செலவில் 199 வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து