எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : 2026ன் துணை முதல்வரே என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையைக் குறிப்பிட்டு சுவரொட்டி ஒட்டிய விவகாரம் தொடர்பாக மாநில செயலாளர் ஏ.வி.எம். ஷெரிப்-புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை அனுப்பியுள்ள நோட்டீசில், தமிழ்நாடு காங்கிராஸ் கமிட்டியின் மாநில செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஏ.வி.எம். ஷெரிப் பெயரில் ஒரு சுவரொட்டி சென்னை மாநகரில் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இண்டியா கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் பல்வேறு மதவாத தீய சக்திகள் கருமேகக் கூட்டம் போல் சூழ்ந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ஒற்றுமையாக இருக்கும் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கூட்டணி பற்றி பேசுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே அனைத்து அதிகாரமும் உள்ளது. நான் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, நமது மூத்த தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. எனது பிறந்தநாளை முன்னிட்டு தங்களுடைய இந்த சுவரொட்டி விளம்பர செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு, ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்பட்டதாகும். உங்களுடைய இந்த செயலுக்கு தகுந்த விளக்கத்தை 15 தினங்களுக்குள் எழுத்துபூர்வமாக நேரில் வந்து விளக்க வேண்டும். தாங்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையுடன் கலந்துபேசி உங்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


