Idhayam Matrimony

ஆட்சியில் பங்கு குறித்து இப்போது பேச முடியாது : நயினார் நாகேந்திரன் பேட்டி

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      தமிழகம்
Nayenar-Nagendran

Source: provided

சென்னை,  : ஆட்சியில் பங்கு குறித்து இப்போது பேச முடியாது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துவிட்டது. அந்த வகையில் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கிறது. அதேவேளை, தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவர் நெல்லையில்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க.வுக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே நீண்ட இழுபறிக்குப்பின் கூட்டணி அமையவில்லை. ஏற்கனவே உள்துறை மந்திரி அமித்ஷாவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பேசியுள்ளனர். அன்றே செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து கூட்டணி குறித்து அறிவித்துவிட்டோம். ஆகையால், நீண்ட இழுபறிக்கு இங்கு இடமில்லை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, துணை முதல்வர்  பதவி என்பது குறித்த இப்போது பேசமுடியாது. தமிழகத்தில் தேசிய கூட்டணி அமையும். அதன் தலைவராக தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார். நெல்லையில் மீண்டும் போட்டியிடுவது குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தேசிய ஜனநாய கூட்டணிக்குதான் மக்கள் வாக்களிக்கப்போகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாக உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து