எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவு பெற்ற நிலையில் மே 19-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதுவரை மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், இறுதித் தோ்வாக சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தோ்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவடைகிறது. தொடா்ந்து மாணவா்களின் விடைத்தாள்கள் ஏப்.17-ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்குக் கொண்டுவரப்படவுள்ளன.
மேலும் ஏப்.21-ஆம் தேதி முதன்மை விடைத்தாள் திருத்தும் பணியில், ஏற்கெனவே பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவம் மிக்க ஆசிரியா்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கவுள்ளனா். அதனைத் தொடா்ந்து, உதவி விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி மே 19-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


