முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை  தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் நேற்று (செவ்வாய் கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர்,  மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கியிருந்த ஒப்புதல் 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் திரும்ப பெற்றதை அடுத்து மாநில அரசின் அனுமதி இல்லாமல் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை  என்று வாதிட்டனர்.

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன்,  டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்கள் தூக்கி எறியயப்படுவார்கள்'' என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு அமலாக்கத் துறைக்கு தமிழ்நாடு அரசு உதவலாமே? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பி.எஸ்.ராமன், ''சட்டத்தை மீறி அமலாக்கத் துறை இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும்?.. அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார். அதற்கு என்ன அர்த்தம்? என்று கூறினார்.

இதையடுத்து டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை  தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (புதன்கிழமைக்கு) தள்ளிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து