எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
டோனி அதிரடி...
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையே திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றது. 167 ரன்களை விரட்டிய சென்னை அணி, பவர் பிளேவுக்கு பிறகு பவுண்டரி அடிக்க திணறிக் கொண்டிருந்த சமயத்தில் களமிறங்கிய கேப்டன் டோனி, தனது அதிரடியால் வெற்றி இலக்கை எட்ட உதவினார். 11 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என மொத்தம் 26 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறத்தில் ஷிவம் துபே 37 பந்துகளில் 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சாதனைகள்...
அதிரடியாக ரன் குவித்தது மட்டுமின்றி, ஸ்டம்பிங் மற்றும் ரன்-அவுட் செய்து லக்னோ வீரர்களின் ரன் குவிப்பை இறுதி நேரத்தில் கட்டுப்படுத்த உதவிய காரணத்துக்காக டோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் ஆட்டநாயகன் விருதை பெற்ற மிகவும் வயதான வீரர் என்ற பெருமையை டோனி பெற்றார்.
முதல் வீரர்...
மேலும், சென்னை அணியின் கேப்டனாக 16வது முறையாக ஆட்டநாயகன் விருதை டோனி பெற்றுள்ளார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு டில்லி அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருதை பெற்ற டோனி, சுமார் 2,175 நாள்களுக்கு பிறகு மீண்டும் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுமட்டுமின்று ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட்டுகள் (ஸ்டம்பிங், கேட்ச், ரன் அவுட்) வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையையும் டோனி படைத்துள்ளார். கேப்டனாக 17 முறை ஆட்டநாயகன் விருதைப் பெற்று டோனி முதலிடத்தில் உள்ளார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற வயதான வீரர்கள்:
1) 43 வயது 280 நாள்கள் - டோனி - 2025.
2) 42 வயது 208 நாள்கள் - பிரவின் தாம்பே - 2014.
3) 42 வயது 198 நாள்கள் - பிரவின் தாம்பே - 2014.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


