Idhayam Matrimony

3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2025      தமிழகம்
EPS 2025-03-17

Source: provided

சென்னை : 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. கொடுத்த நிலையில் அதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததாக சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையில் நேற்று 3 அமைச்சர்கள் மீது அ.தி.மு.க. கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு சபாநாயகர் அப்பாவு, தீர்மானம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது பரிசீலனையில் உள்ளது. மற்ற அலுவல்கள் (நேற்று) இருப்பதால், அதை விவாதத்திற்கு எடுக்க முடியாது என தெரிவித்தார். சபாநாயகரின் பதிலை ஏற்க மறுத்து சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மட்டும் அவையின் உள்ளே இருந்தார். பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் கால்வாய்களை சீரமைப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசினார்.

இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அ.தி.மு.க. சார்பில் பேரவையில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தரமறுத்ததை கண்டித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து