எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10,000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தான் இந்த கொள்கையின் முக்கிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் அரும்புநிலை நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய தொழில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. விண்வெளித்துறையில் நிறுவனங்களையும், புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10,000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தான் இந்த கொள்கையின் முக்கிய இலக்கு. இந்தியாவிலேயே முதல் முறையாக விண்வெளிக்கு என்று கொள்கையை தமிழ்நாடு வகுத்துள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


