Idhayam Matrimony

பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் : ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      உலகம்
Hamaz

Source: provided

கெய்ரோ : பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என்று ஹமாஸ் தலைவர் அறிவித்துள்ளார். 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் தரப்பில் சுமார் 2 ஆயிரம் பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 50 ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

மீதமுள்ள பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அதிபர் டிரம்ப் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், எங்களிடம் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார் என அறிவித்துள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலி அல்-ஹய்யா இஸ்ரேலுக்கு போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஹமாஸ் அமைப்பிடம் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து