முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.பி.எஸ். முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பா..? மத்திய அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      இந்தியா
Toll-booth 2023-09-01

புதுடில்லி, மே 1 முதல் ஜி.பி.எஸ். முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, இனி செயற்கோள் மூலமாக ஜி.பி.எஸ். முறையில் வாகனங்கள் செல்லும் தொலைவைப் பொருத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல் பரவியது. இந்நிலையில் இந்தத் தகவல் உண்மையல்ல என்றும் அதுதொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சுங்கச்சாவடிகளில் மே 1 முதல் பாஸ்டேக் கட்டண முறைக்குப் பதிலாக ஜி.பி.எஸ். முறையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவி வரும் தகவல் உண்மையல்ல.  பொதுமக்கள், ஊடகங்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தற்போதைய  பாஸ்டேக் கட்டண முறையே தொடரும்' என்று கூறியுள்ளது.

அதேநேரத்தில் சுங்கச்சாவடிகள் வழியாக வாகனங்கள் தடையின்றி இயக்கவும் பயண நேரத்தைக் குறைக்கவும் குறிப்பாக சுங்கச்சாவடிகளில் காத்திருப்பதைக் குறைக்க விரைவாக கட்டணம் பெறும் ஏ.என்.பி.ஆர். - பாஸ்டேக் கட்டண வசூலிப்பு முறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள எண், கேமரா மூலமாக பெறப்பட்டு அத்துடன் பழைய ஃபாஸ்டேக் முறையுடன் ரேடியோ-அதிர்வெண் அடையாளத்தை  பயன்படுத்தி விரைந்து கட்டணம் பெறும் முறை கொண்டு வரப்படும். இதனால் வாகனங்கள் நிற்க வேண்டிய அவசியமிருக்காது. ஒரு சில சுங்கச்சாவடிகளில் சோதனை முறையில் பயன்பாட்டில் உள்ளது என்றும் பயனர்களின் கருத்துகளுக்கு ஏற்ப நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கொண்டு வரப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து