எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஐ.பி.எல். தொடரில் வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 102 சிக்சர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடர்...
ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
102 சிக்சர்கள்...
இந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ஐ.பி.எல். தொடரில் வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 102 சிக்சர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக வான்கடே மைதானத்தில் 19 சிக்சர்களை விளாசி உள்ளார். இரண்டாவது இடத்தில் அந்த அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் (85) உள்ளார்.
விராட் கோலி முதலிடம்...
ஒரு மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட சிக்சர்களை பறக்கவிட்டவர்கள் பட்டியலில் விராட் கோலி (130 சிக்சர்) முதல் இடத்தில் உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதே மைதானத்தில் கிறிஸ் கெய்ல் 127 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் ஏபி டிவில்லியர்ஸ் 118 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 4-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார். மேலும் ஒரு அணிக்காக 250 -க்கும் அதிகமாக சிக்சர் விளாசிய 6-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். அந்த பட்டியலின் முதல் இடத்தில் விராட் (296), கெய்ல் (263), பொல்லார்ட் (258), தோனி (256), ரோகித் (251) ஆகியோர் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


