Idhayam Matrimony

திருமணமானதை மறைத்து மோசடி: நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      சினிமா
sukumar

சென்னை, திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் காதல் சுகுமார் மீது மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பரத் நடிப்பில் வெளியான ‘காதல்’ திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் காதல் சுகுமார். இவர், காதல் அழிவதில்லை, விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பணம், நகையை பெற்று மோசடி செய்ததாக சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் கடந்த ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

சுகுமாருக்கும், துணை நடிகைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அப்பெண்ணிடம் இருந்து நகை, பணத்தை சுகுமார் பெற்றதாக தெரிகிறது. சில நாட்கள் கழித்து அப்பெண்ணிடம் பேசுவதை அவர் நிறுத்திவிட்டார். இதுகுறித்து, கேட்டபோது, தனக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டதாக சுகுமார் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அப்பெண், திருமணமானதை மறைத்து தன்னிடம் நகை, பணம் பெற்று மோசடி செய்ததாக சுகுமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் புகார் அளித்து 3 மாதம் கழித்து, மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விரைவில் சுகுமாரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து