முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலட்சுமி இயக்கும் என் காதலே

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      சினிமா
En-Kadhale 2025-04-21

Source: provided

Sky wanders Entertainment சார்பில் ஜெயலட்சுமி தயாரித்து இயக்கும் படம் "என் காதலே ". லிங்கேஷ், இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா மற்றும் திவ்யா தாமஸ் இருவரும் நாயகியாகளாக நடித்துள்ளார். அறிமுக நடிகர் காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் மதுசூதனன் ராவ், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டோனி ஜான் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு இசை - சாண்டி சாண்டெல்லோ, கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்கியிருக்கிறார் - ஜெயலட்சுமி. படம் பற்றி இயக்குனர் ஜெயலட்சுமி நம்மிடையே கூறுகையில், மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் ஒரு மென்மையான, முக்கோண காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். 

உலக நாடுகள் மத்தியில் நம் தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எப்போதும் தனி மகத்துவம் உண்டு. அப்படி லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வரும் நாயகி லியாவிற்கு மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது காதல் வருகிறது. 

இறுதியில் லியாவின் ஆராய்ச்சி என்ன ஆனது அவர்கள் காதல் நிறைவேறியதா? இல்லையா? என்பதை உணர்ச்சிபூர்வமாக உருவாக்கியிருக்கிறோம் என்றார். மே மாதம் திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது என்கிறார் இயக்குனர் ஜெயலட்சுமி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து