Idhayam Matrimony

குடிமைப்பணிகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2025      தமிழகம்
Stalin 2024-12-04

சென்னை, குடிமைப்பணிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அனைத்து குடிமைப் பணியாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், தேசிய குடிமைப் பணிகள் நாளில், நமது மக்களாட்சியை வலுப்படுத்த அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்றும் உறுதிப்பாடு மிக்க குடிமைப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஆட்சியியல் கொள்கைக்கும் மக்களுக்கும் இடையேயான முக்கியத் தொடர்புக் கண்ணியாக விளங்கும் குடிமைப்பணி அலுவலர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் தொலைநோக்கினைத் தாக்கமிகுந்த செயல்பாடாகக் களத்தில் மாற்றிக் காட்டுபவர்கள் ஆவர். சமத்துவம், செயல்திறன், இரக்கம் ஆகியவற்றுடன் அனைத்துக் குடிமக்களையும் அவர்களுக்குரிய மாண்புடன் அணுகும் ஆட்சிநிர்வாகத்தினை உறுதிசெய்யத் தமிழ்நாடு உழைக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து