எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் எப்படி பேச வேண்டும் என வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த அமிர்தபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: அரசியல் தலைவர்கள் பொது இடங்களில் பேசும் போது சாதி மத வெறுப்பை தூண்டும் வகையிலும், பெண்களுக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசும் நிலை அதிகரித்து வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதோடு, சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் எழ வாய்ப்பு உள்ளது. எனவே அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் பேசும்போது முறையாக, நாகரீகமாக பேசுவது தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “சாதி, மத வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


