எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
கர்னால் (ஹரியானா) : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் , திருமணமாகி ஏழு நாட்களேயான ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் செவ்வாய்க்கிழமை கூடியிருந்த போது, பிற்பகல் 3 மணியளவில் பைசாரன் மலையிலிருந்து புல்வெளி பகுதிக்குள் திடீரென நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர். இதில், 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த நிலையில், திருமணம் ஆகி ஏழு நாட்களேயான ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகாரி லெப்டினன்ட் வினய் நர்வால் உயிரிழந்ததை கடற்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
வினய் நர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடற்படையில் சேர்ந்துள்ளார். கேரளத்தின் கொச்சியில் பணியாற்றி வந்த நிலையில் ஏப்ரல் 16 ஆம் தேதி அவருக்கு திருமணமாகி ஏப்ரல் 19 ஆம் தேதி திருமண வரவேற்பு நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு விடுமுறைக்காக காஷ்மீரில் இருந்துள்ளார்.
வினய் நர்வால் திருமணத்துக்குப் பிறகு குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வினய் நர்வால் இறந்த செய்தி இடியாக வந்து சேர்ந்ததாக அவரது பக்கத்து வீட்டார் நரேஷ் பன்சால் தெரிவித்துள்ளார்.
நர்வால் இறப்பு குடும்பத்தினர், சமூகம் மற்றும் பாதுகாப்புத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடு நல்ல ஒரு இளம் அதிகாரியை இழந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தங்கள் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


