எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : விஸ்டன் சாதனை புத்தகத்தில் பும்ரா, மந்தனா இடம்:பெற்றுள்ளனர்.
கிரிக்கெட் உலகின் பைபிள்...
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'கிரிக்கெட் உலகின் பைபிள்' என்று போற்றப்படும் 'விஸ்டன்' புத்தகம் ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும். இதில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஜஸ்பிரித் பும்ரா...
இதன்படி 2025-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர், வீராங்கனைகள் யார் என்பதை 'விஸ்டன்' வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. 31 வயதான பும்ரா கடந்த ஆண்டில் (2024) டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதில் சராசரியாக 14.92 ரன்னுக்கு ஒரு விக்கெட் சாய்த்து இருந்தார். ஒரு சீசனில் இவ்வளவு குறைவான ரன் சராசரியுடன் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக பும்ரா திகழ்கிறார் என விஸ்டன் பாராட்டி இருக்கிறது. அத்துடன் அவர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை கைப்பற்றியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மந்தனா...
28 வயதான மந்தனா கடந்த ஆண்டில் மூன்று வடிவிலான போட்டியிலும் சேர்த்து 1,659 ரன்கள் குவித்தார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன், விக்கெட் கீப்பர் ஜாமி சுமித், இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


