Idhayam Matrimony

சென்னை விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ விரிவாக்க திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த அனுமதி

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      தமிழகம்
Metro-Rail-2024-10-24

Source: provided

சென்னை : சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ விரிவாக்கத் திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்திலிருந்து, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூா், வண்டலூா் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கிலோ மீட்டா் தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.

இந்த மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தமிழக அரசிடம் சமா்ப்பித்த நிலையில், ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யவும், மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மெட்ரோ விரிவாக்கத்துக்கான நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 hour ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 hour ago
View all comments

வாசகர் கருத்து