Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமரின் கான்பூர் பயணம் ரத்து

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      இந்தியா
Modi 2024-12-1

Source: provided

புதுடெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மிரின் சுற்றுலா நகரமான பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்தனர். அப்போது ஆயுதமேந்தி இந்தப் பகுதியில் நுழைந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் 2 வெளிநாட்டவர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 24) கான்பூர் செல்லவிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கான்பூரில் ரூ.20,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி கான்பூர் செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து