எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
லக்னோ : உத்தரபிரதேசத்தில் அரிசி ஆலையில் விஷவாயு தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பஹராய்ச் மாவட்டம் பைஹந்தா பகுதியில் அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். இந்நிலையில், அரிசி ஆலையின் டிரையர் எந்திரத்தில் கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிக்கு 8 தொழிலாளர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, விஷவாயு தாக்கி அனைவரும் மயங்கி விழுந்தனர். இந்த சம்பவம் குறித்து சக ஊழியர்கள், தீயணைப்புத்துறையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே 5 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். எஞ்சிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


