முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்பேரவை மரபை காக்க வேண்டும்: எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் அறிவுரை

சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2025      தமிழகம்
Durai-Murugan 2024-12-03

சென்னை, சட்டசபை மரபை காக்க வேண்டும், நையாண்டி செய்யக்கூடாது என எம்.எல்.ஏ.க்களுக்கு  அமைச்சர் துரைமுருகன் அறிவுரை வழங்கியுள்ளார். 

சட்டசபையில் வினாக்கள், விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது, பேசுவதற்கு வாய்ப்பு தருமாறு கை தூக்கித் தூக்கி கை வலிக்கிறது என அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவி கூறினார். உங்களுக்கு கை சரியான பின்னர் பேசுவதற்கு வாய்ப்பு தருகிறேன், அமருங்கள் என எம்.எல்.ஏ. ரவிக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், உறுப்பினர்கள் அனைவரும் அவை மரபை காக்க வேண்டும், நையாண்டி செய்யக்கூடாது என அறிவுறுத்தினார். சபாநாயகர் அப்பாவு பேசுகையில், எம்.எல்.ஏ. ரவி 3 கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு தந்துள்ளேன். யாருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். எல்லோருக்கும் எல்லாம் கொடுக்க வேண்டும் என்பது தான் இந்த ஆட்சி. அதை கடைபிடித்து எல்லோருக்கும் எல்லாம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து