எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடில்லி : ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற முக்கிய நடவடிக்கைகளுக்கு பொது வைபை நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அரசு எச்சரித்துள்ளது.
விமான நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இலவச வைபை வசதி வழங்கப்படுகிறது. ஆனால் அது உங்கள் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். இந்தப் பொது வைபை நெட்வொர்க்குகளில் பல முறையாகப் பாதுகாக்கப்படவில்லை, இதனால் அவை ஹேக்கர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு எளிதான இலக்காகின்றன.
இந்நிலையில் மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பொது வை பை நெட்வொர்க்குகள் மூலம் வங்கி அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்ற முக்கியமான செயல்களைச் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றவாளிகள் பொது வைஃபையில் பாதுகாப்பற்ற இணைப்புகளை எளிதில் ஹேக் செய்து விடுகின்றனர். இதனால் பயனர்கள், தரவு திருட்டு, நிதி இழப்பு மோசடிக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்படும்போது பரிவர்த்தனைகள் செய்வதையோ அல்லது தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


