Idhayam Matrimony

புதின் மீது டிரம்ப் அதிருப்தி: உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல் நடத்த தயார் நிலையில் ரஷ்யா..!

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      உலகம்
Trump-Putin 2024-11-11

Source: provided

மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்த நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த, 150 ட்ரோன்களை ரஷ்யா தயாராக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே நேரத்தில் பங்கேற்றனர். மேலும், போப் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்திருந்த இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தமது ’ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், உக்ரைனில் நீடிக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதில் புதினுக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் எழுகிறது.  பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைகளை வீசுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. உக்ரைன் நகரங்கள் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களைப் பார்த்தால், போரை நிறுத்த புதின் விரும்பவில்லை என்றும், அவர் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும்கூட தோன்றுகிறது என்று தெரிவித்தார். மேலும், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை கடுமையாக்கப்படும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து