Idhayam Matrimony

நடராஜனுக்கு வாய்ப்பு எப்போது? - கெவின் பீட்டர்சன் அளித்த பதில்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      விளையாட்டு      தேர்தல்
Natarajan 2023-09-11

Source: provided

புதுடெல்லி : எதிரணியை கட்டுப்படுத்தும் திறமை கொண்ட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பெங்களூரு வெற்றி...

ஐ.பி.எல். தொடரில் புதுடெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 162 ரன் மட்டுமே எடுத்தது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ராகுல் 41 ரன் எடுத்தார். தொடர்ந்து 163 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு 18.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 165 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

ரசிகர்கள் வருத்தம்...  

நடப்பு தொடரில் டெல்லி அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம் பிடித்துள்ளார். மெகா ஏலத்தில் அவரை ரூ. 10.75 கோடிக்கு டெல்லி வாங்கியது. இதன் காரணமாக அவர் டெல்லி பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடராஜனுக்கு இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதிகட்டத்தில் யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை கட்டுப்படுத்தும் திறமை கொண்ட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

யோசனை சொல்லுங்கள்...

இந்நிலையில், எதிர்வரும் ஆட்டங்களில் நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என டெல்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது, நடராஜன் சிறப்பாக விளையாடக்கூடியவர் தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு போட்டியில் இம்பேக்ட் வீரருடன் சேர்த்து 12 பேர்தான் விளையாட முடியும். இப்போது இருக்கும் அணியில் அவரை எங்கே விளையாட வைக்கலாம் என உங்களால் முடிந்தால் யோசனை சொல்லுங்கள். அது எங்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து